கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்த நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்றது.
கழகத்தின் தலைவர் ஐ.எம்.றிஸ்வின் (றிஸ்வி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பிரிக்கட் இராணுவ முகாமின் சிவில் விவகாரங்களுக்கான இராணுவ அதிகாரி தம்மிக்க வீரசிங்க, உன்னிச்சை இராணுவ முகாமின் கட்டளைத் தளபதி இசுறு சேனாநாயக்க மற்றும் மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.அலியார் ஹாஜியார், ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக், ஹயா பிரைவட் லிமிடெட் பணிப்பாளர் ஏ.எல்.நஜிமுதீன், ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் ஏ.சீ.எம்.நியாஸ்தீன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், சமூகப் பணியாற்றிவரும் நபர்களின் சேவைகளைப் பாராட்டி கௌரவித்து நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், இராணுவ அதிகாரிகளும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கலை நிகழ்ச்சிகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது, தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment