ஒரு பில்லியன் டொலர் கடன் பெறுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக Bloomberg இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.சர்வதேச நாணய நிதியத்திடம் சாதகமான பதில் கிடைத்தவுடன் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளார்.
அத்துடன், அமைச்சுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அறிக்கை கோரியுள்ளதோடு அதில் எரிசக்தி, பொலிஸ் மற்றும் வர்த்தக அமைச்சுகள் ஆகிய மூன்று அமைச்சர்களே வெற்றிகரமாக செயற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட தற்போதைய அமைச்சரவை மாற்றுமாறு ஜனாதிபதிக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அமைப்புகள் கோரியுள்ளன.
இந்த நிலையில் விளையாட்டு, நெடுஞ்சாலைகள், போக்குவரத்து , வெகுஜன ஊடகத்துறை , துறைமுகம், தொழில் அமைச்சு என்பன அமைச்சரவை மாற்றத்தின் போது மாற்றப்பட உள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment