அபிவிருத்தியை தொடர ஆணை கேட்கிறார் சம்மாந்துறை அஸ்பர்!



னைய பிரதேசங்களைப்போல் அல்லாது சம்மாந்துறை என்பது பரப்பில் கூடிய மக்கள் செறிவாக வாழும் ஒரு பிராந்தியம் என்றும், இந்தமக்களுக்கு தேவைகள் அதிகம் உள்ளதாகவும், கடந்த காலங்களில் சம்மாந்துறையில் பலம்வாய்ந்த அரசியவாதிகள் இருந்து; பல்வேறு உட்கட்டுமான பணிகளை செய்ததாகவும் இப்போது அவர்களது இடம் வெற்றிடமாக உள்ளதாகவும், இடைப்பட்ட காலத்தில் மக்கள் வழங்கிய ஆணையை வைத்து; தன்னால் முடிந்த பல்வேறு பணிகளை செய்துள்ளதாகவும், இவ்வாறான பணிகள் தொடரவேண்டும் என்று மக்கள் கருதினால்; எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சம்மாந்துறை பிரதேசத்தில், சுயேட்சை குழு 01 இல் போட்டியிடும் பிரதேச சபை உறுப்பினர் உதுமாலெப்பை அஸ்பர் தலைமையிலான அணிக்கு மக்கள் வாக்களிக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கடந்தகாலங்களில் சில முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டதாகவும் அவர்களை வைத்துக்கொண்டு மக்களின் அடிப்படைத்தேவைகளைக் கூட செய்யமுடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் மக்களது அடிப்படைத்தேவைகளை செய்து கொடுப்பதை விடுத்து, அவரவரது கட்சிகளை வளப்படுத்தவே முற்படுவதாகவும் இதனால் மக்கள் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளதாகவும் கட்சிகளோடு பயணிக்கும் பட்சத்தில் அபிவிருத்தி என்பதை அடைய முடியாது என்பதால் சந்தர்ப்பத்தைப் பொறுத்து மக்களுக்கு ஏதாவது செய்வதற்காகத் தான், சுயேட்சையாக போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபைக்காக சுயேட்சை குழு 01 இல் போட்டியிடும் பிரதேச சபை உறுப்பினர் உதுமாலெப்பை அஸ்பர் அவர்கள் தனது நிலைப்பாட்டை விளக்கும் ஊடக சந்திப்பை 2023.02.06 ஆம் திகதி நடாத்தியிருந்தார் இதன்போது கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் கூறிய கருத்துக்கள் ஒலி வடிவில் இணைக்கப்பட்டுள்ளது:




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :