திருமலையில் சரியான பாதையில் வெளிநாட்டுக்கு செல்லல் “நாடக நிகழ்வுகள்



ஹஸ்பர்-
திருகோணமலை மாவட்ட செயலகம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் சர்வதேச புலம்பெயர் அமைப்பு ஆகிய இணைந்து “சரியான பாதையில் வெளிநாட்டுக்கு செல்லல் “என்ற தலைப்பில் கருத்தாடலுடன் கூடிய நாடகத்தினை மாவட்டத்தினுடைய தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் அரங்கேற்ற உள்ளன.

சரியான பாதையில் வெளிநாட்டுக்கு வெளிநாட்டுக்கு செல்ல வேண்டியதன் அவசியம், சரியான பாதையில் வெளிநாடு செல்லாமை காரணமாக ஏற்படக்கூடிய சமூக ரீதியான சட்டரீதியான பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களை விழிப்புணர்வு செய்வதாக இவ்வேலைத்திட்டம் அமைகின்றது.

இம்மாதம் 27ஆம் திகதி காலை 9 மணிக்கு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா வித்தியாலயத்திலும் 11:30 மணிக்கு அனுராதபுர சந்தி விபுலானந்தா வித்தியாலயத்திலும், 28ஆம் திகதி காலை 9 மணிக்கு நிலாவெளி கைலேஷ்வரா வித்தியாலயத்திலும் ,காலை 11:30 மணிக்கு சல்லி அம்பாள் மகா வித்தியாலயத்திலும் நடைபெற உள்ளன.

மார்ச் மாதம் முதலாம் திகதி காலை ஒன்பது மணிக்கு கிண்ணியா நடுத்தீவு சமூக சேவை நிலையத்திலும் ,11.30 மணிக்கு கிண்ணியா அல் அதான் வித்தியாலயத்திலும் இரண்டாம் திகதி காலை 9 மணிக்கு மூதூர் பாட்டாளிபுரம் சமூக சேவையை நிலையத்திலும் ,11 30 மணிக்கு மூதூர் பிரதேச செயலக கலாசார மண்டபத்திலும் ,மூன்றாம் திகதி காலை 9 மணிக்கு முள்ளிப்பொத்தானை முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் காலை 11:30 மணிக்கு தம்பலகாமம் ஆதி கோனேஸ்வரா மகா வித்யாலயத்திலும் இந்த கருத்தாடலுன் கூடிய நடனம் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :