கல்குடா அஸ்பெக் அகடமியின் ஏற்பாட்டில் "தேசியம் வியக்கும் ஆரோக்கியத்துடனான எழுச்சி" கெளரவிப்பு அண்மையில் இடம்பெற்றது.
ஹோமாகம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற 4வது இளையோர் தேசிய மட்ட பந்து பேட்மிண்டன் சுற்றுப்போட்டியில் தேசிய சம்பியன்களாக மகுடம் சூடிக்கொண்ட கல்குடா அஸ்பெக் அகாடமி வீரர்களைக் கௌரவிக்குமுகமாக இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மீராவோடை அஸ்பெக் அகடமி முன்றலிலிருந்து சைக்கிள் பவனியுடனான ஊர்வலம் ஆரம்பமாகி வாழைச்சேனை பொது மைதானத்தை வந்தடைந்தது.
கல்குடா அஸ்பெக் அகடமியின் பணிப்பாளர் ஏ.எல்.எம்.இர்பான் தலைமையில் மிக விமர்சையாக இடம்பெற்ற இந்நிகழ்வில், வாழைச்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள், மீராவோடை ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்தினர், கல்குடா அஸ்பெக் அகடமி நிர்வாகத்தினர், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில், 20வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பிரிவில் கலந்து கொண்ட ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களான எம்.எச்.எம்..அக்தாஸ், எச்.எம்.அப்னான், எப்.எம்.பைசான், எம்.ஆர்.எம்..சனப், யூ.எம்.சாஜித், வாழைச்சேனை அந்நூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களான எம்.பி.எம்..நஜாத், ஏ.பீ.எம்.ஸஹீர், எம்.எப்.அல்அமீன், ஜே.எம்.ஆசிம், எம்.என்.எம் நதீர், எச்.எம்.ஏ ரிபாத், மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவர்களான யூ.எம்..ஆசாத், எஸ்.ஏ.ரஹ்மான், ஏ.எல்.எம்..நஸீம் மற்றும் பேருவளை ஜாமிய்யா நளீமியா மாணவன் எம்.எம்..மக்காரிம் ஆகியோர் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment