ஊடகவியலாளர் மருதமுனை றாசிக் நபாயிஸ் எழுதிய 'மருதமுனை சமாதான நீதிபதிகள்' நூல் வெளியீடும் கௌரவிப்பும்.



கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனை ஆவணக்காப்பகத்தின் வெளியீடாக ஊடகவியலாளர் மருதமுனை றாசிக் நபாயிஸ் எழுதிய'மருதமுனை சமாதான நீதிபதிகள்' நூல் வெளியீடு சனிக்கிழமை (28-01-2023)காலை மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் ஏ.பீ.எம். மரைக்கார் நினைவரங்கில் நடைபெற்றது. கல்முனை வடக்கு முஸ்லிம் சமாதான நீதிபதிகள் சங்கத்தின் தலைவரும்,ஓய்வு நிலை வருமான வரி மதிப்பீட்டாளரும், பிரசித்த நொத்தாரிஸுமான சமாதான நீதிபதி ஏ.எல்.எம்.முனாஸ் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம்,வட மாகாணத்திற்கான குடியியல் ,மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத்லெப்பை அப்துல் மனாப் கலந்து சிறப்பித்தார்.கௌரவ அதிதிகளாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை தொழில் நியாமன்றின் தலைவரும்,மேலதிக நீதிவானுமாகிய வி.எம்.சியான், பொத்துவில் நீதிவான் நீதிமன்ற மாவட்ட நீதிபதியும்.நீதிவானுமாகிய ஏ.சி.றிஸ் வான்,அக்கரைப்ற்று மாவட்ட நீதிபதியும்,நீதிவானுமாகிய எம்.எச்.எம். ஹம்ஸா மற்றும் சிறப்பு அதிதியாக ஓய்வு நிலை அதிபர் ஏ.ஆர்.அப்துல் றாசிக் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு நூலாசிரியர் ஊடகவியலாளர் மருதமுனை றாசிக் நபாயிஸ் ஆற்றிவரும் சமூகப்பணி மற்றும் ஊடகப்பணியை கௌரவித்து மருதமுனை 4ஜிஹேன்லூம் பிறைவட் லிமிட்டட் முகாமைத்துவப் பணிப்பாளர் பத்றுஸ்;;மான் பஹத்ஸமான் அதிதிகலோடு இணைந்து'4ஜி ஹேன்லூம்'விருது வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.அத்துடன் பிரதம அதிதி,மற்றும் அதிதிகள் பலருக்கு நூல்களை வழங்கி கௌரவித்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :