இலங்கை சோசலிச குடியரசின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி இளைஞர் சேவை மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “ 75இல் பசுமையான நகரம் வேலைத்திட்டத்தின் 3நாள் திட்டம் நேற்று முன்தினம் பிரதேச செயலகம் தொடக்கம் களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தை வரை இடம்பெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் இளைஞர் சேவை உத்தியோகத்தர் த.சபியதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலக இளைஞர்கள் யுவதிகள் உட்பட மொத்த துண்டுப்பிரசுரம் 1000 வழங்கி தெளிவூட்டல் செய்யப்பட்டது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் , மாவட்ட சம்மேளன தலைவர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் , பிரதேச சம்மேளன தலைவர்,உபசெயலாளர், அமைப்பாளர், உள்ளிட்ட நிருவாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்,

0 comments :
Post a Comment