அரசின் வரிக்கொள்கைக்கு எதிராக தென்கிழக்கு பல்கலையில் போராட்டம்!



ரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, TASEU எனப்படும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்புப் போராட்டம் ஒன்று 2023.02.01 ஆம் திகதி பல்கலைகழக நுழைவாயிலில் இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைகழகத்தின் ஆசிரியர் சங்க உயர்மட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பீடங்களையும் சேர்ந்த பேராசிரியர்கள் சிரேஷ்ட கனிஷ்ட விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்த இப்போராட்ட நிகழ்வில் அரசு மேற்கொண்டுள்ள பாரிய வரி விதிப்புக்கு எதிராக பல்வேறு சுலோகங்கள் ஏந்தியவாறு நீதி கேட்டு கோஷங்களை எழுப்பினர்.

இதன் போது “அநீதியான வரிவிதிப்பை நிறுத்து”, “அரசின் ஊழலால் விழுந்தவர்களை வரி ஏறி மிதிக்கிறது”, “பணத்தை எடுத்தவரிடம் கேட்பதே நீதி எங்களிடம் கேட்பது அநீதி” போன்ற பதாகைகளை ஏந்தியாவாறு விரிவுரையாளர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அரசுக்கும் மக்களுக்கும் தங்களது நிலைப்பாடுகளை தெளிவு படுத்தி கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன.




















 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :