துறையூர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட ( Batminton ) பூப்பந்தாட்டப் பயிற்சி முகாம்.




அஸ்ஹர் இப்ராஹிம்-
ம்மாந்துறை பிரதேசத்தில் பூப்பந்தாட்ட விளையாட்டினை பிரபல்யப்படுத்தி இளைஞர்களை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தயார் படுத்தும் நோக்கத்தோடு அனைத்து கழக வீரர்களையும் உள்ளடக்கியதாக துறையூர் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் கடந்த வெள்ளிக்கிழமை சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள பூப்பந்தாட்ட விளையாட்டரங்கில் துறையூர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.ஆர்.எம்.மனாஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் கலந்து சிறப்பித்திருந்தார்.

ஓ.ஸி.டி அமைப்பின் தலைவர் அஸ்மி யாஸின் ,துறையூர் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் எம்.ரீ.எம்.றீஸா , பூப்பந்தாட்ட வளவாளர்களான எல்.சுலேட்சன் ,பீ.வஸந் , ஏ.றியாஸ் ,கராத்தே பயிற்சியாளர் எம்.இர்ஷாத் . சம்மாந்துறை கிரிக்கெட் சம்மேளனத் தலைவர் எம்.வை.எம்.அனீஸ் கடந்த காலங்களில் துறையூர் மண்ணுக்கு பூப்பந்தாட்டத்தின் மூலம் பல வெற்றிகளைத் தேடித்தந்த முனாஸிர் , ஹஸன்,யுஸ்ரிமற்றும் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :