ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் 73 ஆவது ஊடகப் பயிற்சிச் பட்டரை 2023.02 . ஞயிற்றுக்கிழமை 19 ஆம் திகதி ஹெம்மாத்துக்கமவில் அல் அஸ்ஹர் முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் இக் கல்லுாாியின் பழைய மாணவா்களது அனுசரனையில் நடைபெற்றது . இப்பிரதேசத்தினைச் சார்ந்த 5 பாடசாலைகளது சிரேஸ்ட மாணவ மாணவிகளும் மற்றும் ஊடகத்துறை சார்ந்த ஆசிரியா்களும் இக் கல்லுாாியின் பழைய மாணவ மாணவிகளும் கொண்ட இரு அமர்வுகளாக பயிற்சிச்பட்டரைகள் நடைபெற்றது. .
இச் செயலமா்வுகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்ஹான் பீபி இப்திகார் மற்றும் இப்பாடசாலையின் அதிபா் எம்.சி.எம் நவாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் மாலை நேர அமர்வில் கருத்தரங்கில் கலந்து கொண்டவா்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் இந்த கல்லூரியின் பழைய மாணவரும் முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிதாக நியமனம் பெற்றுள்ள பணிப்பாளர் எஸ் .ஏ.எம் . பைசல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா்.
இச் செயலமர்வில் முஸ்லிம் மீடியாபோரத்தின் ஆலோசகரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான என். எம் அமீன், ஊடகப் பயிற்றுவிப்பாளரும் மீடியாபோரத்தின் பொதுச் செயலளருமான சிஹார் அனீஸ், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரிரும் ஊடகப் பயிற்றுவிப்பளருமான எம்.பி.எம். பைருஸ் , உப தலைவா்களான சிரேஸ்ட ஊடகவியலாளா்களான எம்.ஏ.எம்.நிலாம், சிரேஸ்ட ஊடகவியலரும் ஊடகப் பயிற்றுவிப்பளருமான தாஹா முசம்மில் . செயற்குழு உறுப்பிணர்காளான சாமிலா ஷரீப், அஷ்ரப் ஏ சமத், உபசெயலாளர் சாதிக் சிஹான், செயற்குழு உறுப்பிணா் எம்.ஜெஸ்மின் , கலாநிதி எம். ரஸ்மின் ,உறுப்பிணர் ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.ஜ.எம். அஷ்ஹர் ,கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆதில் , மற்றும் உறுப்பிணா்களான பாரா தாஹிர். கல்லுாாியின் ஊடக பொறுப்பசிரியா், பிரதிஅதிபா்கள்,பள்ளிநிர்வாக சபை உறுப்பிணா்கள் பழைய மாணவ சங்கத்தின் உறுப்பிணா்கள் உட்பட பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனா்.
இந் நிகழ்வின்போது கல்லுாாியின் பழைய மாணவா்களும் . ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினாலும் புதிய பணிப்பாளர் பைசலை பொன்னாடை போற்றியும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் . இச் செயலமர்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்லுாாி அதிபா் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன . பாடசாலை நுாலகத்திற்கு அஷ்ரப் ஏ சமத சேமித்துவைத்திருந்த ஒரு தொகை நுால்கள் கல்லுாாி அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment