"அஹச மீடியா" நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் ”, விஷ்வ கலா அபிமானி 2023.”விருதுகள் வழங்கும் நிகழ்வு ஜனவரி,(31) , மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றபோது, மூவினங்களையும் பிரதிபலிக்கும் சிரேஷ்ட ஊடகவியலளர்கள்.இலக்கியவாதிகள், பாடகா்கள், கலைஞா்கள்,நடிகர்கள் . சமூகசேவைகளில் ஈடுபடுவோா்கள் வாழும்போதே வாழ்த்தப்படல் வேண்டும் என்ற சிந்தனையின் கீழ் நான்காவது முறையாகவும் இக் கௌரவிப்பு நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பௌத்த சாசன மற்றும் சமய விவகாரம்.கலாச்சார அமைச்சா் விதுர விக்கிரமநாயக்க பாராளுமன்ற உறுப்பிணா் சரத் வீரசேகர அஹஷ மீடியா நிறுவனத்தின் அலோசகரும், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபண ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர், திருமதி ஜானம் ஜானசேகரம் அஹச மீடியா நிறுவனத்தின் பிராதான நிறைவேற்று அதிகாரி பிரியங்கா பண்டாரநாயக்க, முதலாவது பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபா்,பிஸ்மனி ஜெசின் ஆராச்சி, ரோயல் கல்லுாாி அதிபா், ஆர்.எம்.எம். ரத்நாயக்க, தினகரன் பிரதம ஆசிரியா் செந்தில் வேலவா், உள்ளீட்ட அதிதிகளினால் 25 க்கும் மேற்பட்டோா்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது.
இக் கௌரவிப்பு நிகழ்வில் தினகரன் முன்னாள் பிரதிஆசிரியா் ஆனந்தி பாலசிங்கம்,இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் ஒளி..ஒலிபரப்பாளா் நாஹபூசனி கருப்பையா, நாடக்கலைஞா நேரஹிம் சஹிட், தி ஜலன்ட் பத்திரிகையின் சிரேஸ்ட ஊடகவியலாளா் சீனத் கரீம், காலம் சென்ற முகைதீன் பேக் புதல்வா் , இலங்கை ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் தமிழ்பிரிவு பதில் பணிப்பாளா் நிலாா் எம். காசீம் சாா்பாக அவரின் சகோதர் உட்பட பத்திரிகை, தொலைக்காட்சி கலைஞா்களும் விருதுகளை பெற்றுக் கொண்டனா்.
0 comments :
Post a Comment