அமீர் அலியை கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா? ரவூப் ஹகீமிடம் பகிரங்க கேள்வி?



எச்.எம்.எம்.பர்ஸான்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் என்ற வகையில் நானாக யாரையும் கட்சியிலிருந்து விரட்டியது கிடையாது என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வை கட்சியில் இணைத்துக் கொண்டது போன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை இணைத்துக் கொள்வீர்களா? என்று ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.ஐ.முகாஜிரீன் கேட்ட கேள்விக்கே ரவூப் ஹகீம் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை தாய் வீடாக கருதும் யாருக்கும் இந்தக் கதவு திறந்திருக்கும் அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

ஆனால், அவர்கள் இணைய விரும்புகின்ற போது இந்தக் கட்சியின் பாரம்பரியத்துக்கமைய கட்சியில் இருக்கும் அனைத்து முக்கியஸ்தர்களுடனும் கலந்துரையாடிதன் இறுதியில் சாத்தியமான முடிவை செய்கிறேன்.

எதிர்காலத்தில் கட்சியில் யாரும் இணைய விரும்பினால் அது தொடர்பாக பரிசீலித்து இணைக்கப்படுவார்கள் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் ரவூப் ஹகீம் பதிலளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :