விபத்தில் உயிரிழந்த வேன் சாரதியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது, உயிரிழந்த வேன் சாரதியின் சடலம் நள்ளிரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
அதன்படி, அட்டன் – குடாஓயா பகுதியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்த சாரதியான தினேஷ் குமார்யின் இறுதிக் கிரியைகள் நாளை 23.01.2023 இடம்பெற்று, அட்டன் குடாஓயா பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதியின் சடலமும், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment