சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம் அஸ்ரப் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை



மாளிகைக்காடு நிருபர்-
ல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம் அஸ்ரப் வித்தியாலயத்திலிருந்து இம்முறை (2022) புலமைப் பரிசில் பரீட்சையில் ஒரே தடவையில் 5 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலை அதிபர் ஏ.ஏ. கபூர் அவர்களின் மகனான சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய மாணவன் அப்துல் கபூர் முஹம்மட் அஹ்னாப் எனும் மாணவன் சாய்ந்தமருது கோட்டத்தில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற 75 மாணவர்களில் அதிகூடிய 178 புள்ளிகளைப் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார்.

இப்பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் 70 க்கு மேல் சித்தி பெற்றோர்களின் வீதம் 83 சதவீதமாக பதிவாகியுள்ளதுடன் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 59 மாணவர்களில் 33 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். இதில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற ஏ.ஜி.எம். அஹனாப் (178 புள்ளி), எம்.எச்.வை.எம். அக்மல் ஹம்தி (167 புள்ளி), கே.எப்.சப்னம் (162 புள்ளி), எம்.எஸ்.எம். சின்ஹா ரிதா (157 புள்ளி), எம்.எச். இஹ்சான் (148 புள்ளி) பெற்று சாதனை படைத்ததுள்ளனர். மேலும் எம்.என்.எம். நாஸிப் (142புள்ளிகள்) பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வெற்றியை அடைவதற்கு இம்மாணவர்களை பயிற்றுவித்த வகுப்பாசிரியர்கள், மாணவர்களுக்கு முழுமையாக வழிகாட்டல் வழங்கிய அதிபர் எம்.ஐ. சம்சுதீன், பிரதி அதிபர்களான எம்.எஸ்.சுஜான், எம்.எம். நிசார், கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.என்.மலிக், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் ஏ.சகறூன் ,PSI இணைப்பாளர் ஏ.எல் றாஷிக், ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜஹாங்கிர் மெளலவி, வலயத்தின் உதவி ,பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கும் மேலும் இம்மாணவர்களை தரம் 1 தொடக்கம் தரம் 4வரை பயிற்றுவித்த பாடசாலையின் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள், பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், ஆசிரிய குழுவினர் , பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :