வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின் படி வாழைச்சேனை வை.அஹமத் வித்தியாலய மாணவன் மஸ்ஹர் பைஸி ஓட்டமாவடி கோட்டத்தில் அதிகூடிய 174 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
இவ்வாறு சிறந்த புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவனை மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.றமீஸ் ஆகியோர் நேரில் சென்று பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சாதனை படைத்த மாணவனுக்கும் கற்பித்த ஆசிரியருக்கும் பாடசாலை அதிபர் யூ.எல்.எம்.ஹரீஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சாதனை படைத்து பாடசாலைக்கும் பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்துள்ள மாணவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் எம்.எச்.ஜெஸீர் மற்றும் எம்.எப்.றிப்கா தம்பதிகளின் புதல்வராவார்.

0 comments :
Post a Comment