இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஜீவனானந்த சமூக சேவைத் திட்டத்தின் கீழ் வாகரை பிரதேசத்தில் மிகவும் பின்தங்கியுள்ள கொக்குவில் ,கிருமிச்சோடை மற்றும் குஞ்சன்குளம் ஆகிய பகுதிகளில் பத்து அம்ச திட்டங்களுக்கான அடிப்படை அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று நடைபெற்றது.
வாகரையில் நடைபெற்ற நிகழ்வில் கல்லடி ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் ,உதவிப் பொது முகாமையாளர் சுவாமி சுரார்சிதானந்தர் வாகரை பிரதேச செயலாளர் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் தொண்டர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது, சுவாமி ஜீவனானந்தர் சமூக சேவை திட்டத்தின் கீழ், அங்குள்ள மூன்று பள்ளிகளில் அறநெறி பாடசாலைகள் புதிதாக தொடங்கி வைக்கப்பட்டன.
மக்களுக்கான குடிநீர் வசதிக்காக மூன்று அடிக்குழாய்கள் செப்பனிடப்பட்டு வழங்கப்பட்டன.
அத்தோடு ஒவ்வொரு கிழமையும் நடைபெறும் வண்ணம் நடமாடும் வைத்திய சேவை ஒன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இந்த நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன.
இங்குள்ள உயர்வகுப்பு மற்றும் கல்லூரிக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வசதிகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் இங்குள்ள மக்களுக்கான சுயசார்பு வேலைவாய்ப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment