நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தனது பௌண்டேசன் எவ்வாறான முடிவுகளை எடுத்துள்ளது? எந்தக்கட்சியுடன் தனது அரசியல் பயணத்தை எவ்வாறு தொடரும் என்பனபோன்ற விடயங்களை எதிர்வரும் 15 ம் திகதி ஆம் திகதி வெளியிடவுள்ளதாக அதன் தலைவர் உதுமாங்கண்டு நாபீர் கூறுகிறார்.
நாபீர் பௌண்டேசன் அமைப்பு மக்கள் நலன் பேணல் சேவைகள் மூலம் அம்பாரை மாவட்டத்தில் மக்கள் செல்வாக்கு பெற்று விளங்குகிறது.
கடந்த காலத் தேர்தல்களில் அவரது அணியினர் சமூகத்தின் நன்மை கருதி சமூகம் சார்ந்த அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளனர்.
இருப்பினும் இம்முறை பலரது கோரிக்கையின் பிரகாரம் அவரது அணியினரை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான தேவை உணரப்படுகிறது.
அம்பாரை மாவட்டத்தில் உள்ள அவரது தொண்டர்கள் கட்டார் நாட்டில் இருந்து கொண்டு சமூகப் பணி புரியும் அதன் தலைவர் பொறியியலாளர் நாபீர் அவர்களுடன் தொடர்பு கொண்டு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
எதிர் வரும் 15 ஆம் திகதி தனது அணி பற்றியும் போட்டி இடவுள்ள கட்சி பற்றியும், அரசியல் கொள்கை மற்றும் திட்டங்கள் பற்றியும் உத்தியோக பூர்வமாக அறிவுப்புச் செய்யவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலன் பேணுவதில் முதன்மை வகிக்கும் நாபீர் அவர்களுக்கு ஆரம்ப அரசியல் அதிகாரம் கிடைக்கும் போது மேலும் சிறப்புறும் என்பது திண்ணம்.
0 comments :
Post a Comment