உலக சித்தர் தினத்தையொட்டி மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம்!



அபு அலா –
லக சித்தர் தினத்தையொட்டி திருகோணமலை கோணேசபுரி சித்த போதனா வைத்தியசாலையும், திருமலை வளாக சித்த மருத்துவத்துறையும் இணைந்து மூதூர் கங்குவேலி அகஸ்தியர் கோவிலில் மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் சித்தர் சிறப்பு யாகம் அன்னதான நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளதாக சித்த போதனா வைத்தியசாலையின் மருத்துவப் பொருப்பதிகாரி சித்த மருத்துவ நிபுணர் வைத்தியர் (திருமதி) சியாமளா வர்ணகுலேந்திரன் தெரிவித்தார்.

அகஸ்திய மாமுனிவர் பிறந்த மார்கழி மாத ஆயிலிய நட்சத்திரமான 9ஆம் திகதியாகிய இன்று திங்கட்கிழமை ஆறாவது உலக சித்தர் தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. இவர் சித்த மருத்துவத்தின் தந்தையாகவும், மருத்துவத்திற்கும் தமிழுக்கும் அளப்பரிய பல நூல்களை ஏட்டு வடிவில் எழுதியுள்ளார். அவர் செய்த அந்த மகத்தான பணியை உலகளாவிய மக்கள் ஞாபகப்படுத்தும் வகையில் இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.

இத்தினத்தையொட்டி இடம்பெறுகின்ற இலவச மருத்துவ முகாமிலும், சித்தர் சிறப்பு யாகம் அன்னதான நிகழ்விலும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :