2023ம் ஆண்டின் அரச திணைக்களங்களின் முதலாவது கடமை சபதம் எடுக்கும் நிகழ்வு நாடலாவிய ரீதியில் இன்று (02.01.2023) திங்கள் கிழமை இடம் பெற்றது.
அதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர்கள் கடமை சபதம் எடுக்கும் நிகழ்வு உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
இதன் போது தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த முப்படைகளுக்காக இரண்டு நிமிட மௌன அங்சலி செலுத்தப்பட்டதுன் கடமை சபதம் எடுக்கப்பட்டதுடன் உதவி பிரதேச செயலாளரினால் விஷேட உரையும் நிகழ்த்தப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கணக்காளர் எம்.ஐ.எஸ்.சஜ்ஜாத், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.ஹமீட். மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment