முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் சத்தியப்பிரமான நிகழ்வு



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
பிறந்துள்ள 2023 ஆம் ஆண்டின் முதல் வேளை நாளான இன்று சகல அரச நிறுவனங்களில் கடமையை ஆரம்பிப்பதை முன்னிட்டு அரசாங்கத்தின் அரசியல் சட்டத்திற்கு அமைவாக சகல அலுவலர்களும் சத்தியப் பிரமானங்களை மேற்கொண்டதன் பின்னர் தமது கடமைகளை ஆரம்பித்தனர்.
இந்த வகையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும் அரச அலுவலர்கள் தமது கடமைகளை தேசியக் கொடியை ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான அன்வர் அலி மற்றும் அலா அஹமட் ஆகியோரின் தலைமையில் சத்தியப் பிரமானங்களை வாசித்து தமது கடமைகளை ஆரம்பித்தனர்.
இதன்போது உதவிப் பணிப்பாளர் அலா அஹமட் புதிய வருடத்தில் அரச அலுவலர்கள் தமது கடமைகளை வினைத்திறமைகளுடன் அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக மேற்கொள்வது தொடர்பான விளக்க உரையை நிகழ்த்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :