சூரிய உதயம் போன்று சஜித் வெற்றி நிச்சயம்! அன்று யானைக்கு நடந்தது இன்று மொட்டுக்கு நடக்கும்!



வி.ரி. சகாதேவராஜா-
கிழக்கில் சூரியன் உதயமாகி முழு நாட்டுக்கும் ஒளிபரப்புவதுபோல சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி முழு நாட்டிற்கும் ஒளி தரப்போகின்றது. வெற்றி நிச்சயம்.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட தலைவரும் கிழக்கு மாகாண சபை சபாநாயகருமான சந்திரதாச கலப்பதி அம்பாறை கச்சேரியில் நேற்று உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல்
செய்துவிட்டு வருகையில் தெரிவித்தார்.

அவருடன் ஐக்கிய மக்கள் கட்சி தமிழ் அமைப்பாளர் வி.வினோகாந்த் வந்திருந்தார். முன்னாள் கிழக்கு மாகாண சபை முதல்வர் சந்திரகாச கலப்பதி மேலும் கூறுகையில்...

இன்று யானையும் மொட்டும் ஒன்றாக பயணம் செய்கிறது. பல இடங்களிலே மொட்டுக்கு வேட்பாளர்களே இல்லை. பிச்சை எடுப்பது போன்று தேடித் திரிந்து வேட்பாளர்களை பிடிக்கும் பரிதாபம் உள்ளது.
அன்று ஐ.தே.க எனும் யானை முழுநாட்டிலிருந்து ஒரு ஆசனம் கூட இல்லாமல் முற்றாக விரட்டி அடிக்கப்பட்டது. அதைத் தான் இன்று சொல்கிறேன்.
அன்று யானைக்கு நடந்தது இன்று மொட்டுக்கு நடக்கப்போகிறது. மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் எமது சக்தி சஜித் பிரேமதாச.அவருடைய வெற்றி நிச்சயம் மக்களால் உறுதி செய்யப்படும். என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :