2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழிக்கான "அகத்தியம்" என்ற முதல் இலக்கண நூலை எழுதியவரும் சப்தரிசிகளில் ஒருவருமான அகத்திய முனிவர் இலங்கையில் ஆடிஅமாவாசையில் நீராடிய மகாவலி கங்கையில் மரகதலிங்கத்திற்கு அபிஷேகம் இடம் பெற்றது.
அகத்தியர் வாழ்ந்த கங்குவேலி பிரதேசத்திற்கு இலங்கை சித்தர்கள் குரல் அமைப்பினர் விஜயம் செய்தனர்.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜி ஜி தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கூடிய மூதூர் கங்கு வேலி எனும் இடத்திற்கு விஜயம் செய்தனர்.
முன்னதாக அகத்திய ஆலயத்தை தரிசித்த பின்னர்
தாபனத்தின் தலைவர் ஓய்வுநிலைஅதிபர் வேலுப்பிள்ளை தவராசா குழுவினரை வரவேற்றார்.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜியின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை "அகத்தியர் பெருமானின் ஆயிலிய நட்சத்திர குருபூஜை ஜெயந்தி விழா" கோலாகலமாக நடைபெற்றது.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜி , நமசிவாய சுவாமி சிவயோகி மகேஸ்வரன் , சித்தர்கள் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன், உப தலைவர் மனோகரன்,வேதசகா, தியாகராஜா சுவாமி உள்ளிட்ட பல உறுப்பினர்கள் பெரும் யாகத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை கிழக்கு பல்கலைக்கழக சித்தமருத்துவ பீட மாணவர்கள் யாகத்தில் ஈடுபட்டனர். விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் , பிரபல தவில் சக்கரவர்த்தி செந்தில் உள்ளிட்ட குழுவினரும் வருகைதந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் காட்டுக்குள்ளால் சென்று அகத்தியர் ஆடி அமாவாசை தீர்த்தமாடிய மகாவலி கங்கை நதி தீரத்தை அடைந்தனர்.
அங்கு சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜி குழுவினர் மகாவலிகங்கையில் நீராடி, மரகதலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தனர்.
கங்கைக்கரையில் சிவன் ஆலய பீடம் ஒன்று இருக்கிறது . அங்கு விஷேட யாகமொன்றை சிறப்பாக நடாத்தினர்.
வில்வம் இலைகள் மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்து பாராயணம் செய்தார்கள். 208 சித்தர்களை வரவழைக்கும் மந்திரம் சிவசங்கர் ஜி யால் ஓதப்பட்டது. முறைப்படி சகல ஆகுதிகளும் இடப்பட்டன.
குழுவினருடன் ,பாடசாலை அதிபர் கே.கணேசலிங்கம், சிங்கப்பூர் சித்தர் பக்தரான உஷா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இறுதியில் அகத்தியர் ஆலயத்தை அடைந்து அகத்தியருக்கு வஸ்திரம் அணிவித்து விசேட பூஜை செய்து வழிபட்டு விடைபெற்றனர்.

0 comments :
Post a Comment