ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராக மருதமுனையைச் சேர்ந்த முஹம்மது ஹஸன் முஹம்மட் அல்-இஹ்சான் கட்சித்தலைவரால் நியமிக்கப் பட்டுள்ளார்.இவருக்கான நியமனக்கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும்,எதிர்க் கட்சித் தலைவருமான சஜீத் பிரேமதாஸ அண்மையில்(08-01-2023)எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
மருதமுனையின் மூத்த உலமாவான மர்ஹும் களான முஹம்மது ஹஸன் மௌலவி,சித்தி நூறுல் ஐயின் தம்பதியின் புதல்வரான இவர் சமூகசேவையில் அதிக ஆர்வம் கொண்டு பல்வேறுபட்ட அமைப்புக்களில் இணைந்து சேவையாற்றி வருகின்றார்.ஆங்கிலத்தில் நல்ல புலமைகொண்ட இவர் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார்.
0 comments :
Post a Comment