கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு
கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வரும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளரும்,ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் ரஹ்மத் மன்சூர் அவர்களினால் வைத்தியசாலைக்கு மின்பிறப்பாக்கி(Generator)வழங்கி
வைக்கப்பட்டது.
நோயாளர்களின் நலன் கருதி குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.வை.இஸ்ஹாக்கினால்
விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சீ.எஸ்.எம். டப்ளியு.ஏ (CSMWA)அனுசரணையில் கல்முனை மாநகர பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளரும்,ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரான ரஹ்மத் மன்சூரினால் கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு இன்று(14) மின்பிறப்பாக்கி (Generator) வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது கல்முனை பிராந்திய சுகாதர சேவைகள் பணிமனையின் பிரதிப்பணிப்பளார் வைத்தியர் எம்.பி.அப்துல் வாஜித்,கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளின் இணைப்பாளரும் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.ஏ.நபீல்,ஆயுள் வேத வைத்தியசாலைகளின் பொறுப்பதிகாரிகள், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் மெளலவி எம்.சி.அப்துல் சமது,வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், ரஹ்மத்பவுண்டேஷன் அமைப்பினர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது அங்கு உரையாற்றிய ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும்,கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பொது மக்களுக்கு கல்முனை மாவட்ட ஆயுள் வேத வைத்தியசாலையின் மூலம் சிறந்த முறையில் அர்பணிப்புடன் சேவையாற்றி வருவதையிட்டு மிகவும் மகிழ்சசியடைகின்றேன்.
வைத்தியசாலைக்கு தன்னால் முடிந்த உதவிகளை பெற்றுக் கொடுத்து மேலும் வைத்தியசாலையின் முன்னேற்றத்துக்கு தனது பங்களிப்பை வழங்குவதுடன் வைத்தியசாலையை விஸ்தரிப்பதற்கு தன்னால் இயலுமான முயற்சிகளை செய்வேன் என மேலும் தெரிவித்தார்.
அத்துடன் வைத்தியசாலையின் நிலை தொடர்பில் கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.வை.இஸ்ஹாக் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன் தேவையான நடடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பிரதி முதல்வர்
ரஹ்மத் மன்சூர் உறுதியளித்தார்.
0 comments :
Post a Comment