பொத்துவில் மினாறுல் உலூம் வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஏ. தாஜஹான் கடமையேற்றுள்ளார்.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களான Dr. சமட், பொறியியலாளர் சஹான் ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எம்.ஏ. தாஜஹான் அவர்கள் 2008.08.01 பட்டதாரி ஆசிரியராக கடமையேற்றுக் கொண்ட இவர் 2016.05.09 அதிபர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டவராவார்.
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் BA பட்டத்தையும்,
தேசிய கல்வி நிறுவகத்தில் PGDE (merit) பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும், கல்வி முதுமாணி MEd_ கிழக்குப் பல்கலைக்கழகத்திலும், MA(Tamil) முது கலைமாணி (தமிழ்) பட்டத்தையும் பெற்றவர்.
பொத்துவில் செங்காமம் அல்மினா வித்தியாலயத்தைப் பொறுப்பெடுத்து பெளதீக வள திட்டமிடல்களை மேற்கொண்டு தடயம் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் ஊரின் மத்தியில் அமையப் பெற்றுள்ள இப்பாடசாலையில் அடைவுமட்டம், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டி முன்னேற்றுவதற்கு நடவடிக்கையினை மேற்கொள்வார் என நம்பப்படுகின்றது.
0 comments :
Post a Comment