காப்போம் அமைப்பின் 2023 ஆண்டிற்கான முதலாவது மக்களுக்கான சேவை ஆரம்பிப்பு!



மட்டு.துஷாரா -
டந்த பல வருடங்களாக மக்களின் துயரங்களில் பங்கெடுத்து அவர்களுக்கான உதவிகளை உடனுக்குடன் நல்லுள்ளங்களின் ஒத்துழைப்புடன் வழங்கி வரும் காப்போம் அமைப்பின் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் சேவையை கடந்த 05 ஆம் திகதி ஆரம்பித்துள்ளது.

தாயார் யோகநாயகம் தவமணி தேவியின் 60வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில், காப்போம் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர்களுக்கு புதிய ஆடைகளை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (05) மட்டிக்களி செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவன மண்டபத்தில் இடம்பெற்றது.

காப்போம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரன் (திலீப்) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு, திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் எஸ்.பரமேஷ்வரன் பிரதம அதிதியாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.பி.எஸ்.எம்.அத்தநாயக்க, மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மைக்ரோ பினான்ஸ் ஒருங்கிணைப்பாளர் கே.நிர்மலகாந்தன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கிழக்கு மாகாண சமூகசேவை திணைக்களத்தின் தொழில்சார் நிலைய பொறுப்பதிகாரி (திருமதி) ஜீவிதன் சுகந்தினி, திருகோணமலை பிரதேச செயலக சமூக சேவைகள் அதிகாரி சிவநேசன், திருகோணமலை மாவட்ட செயலக முதியோர் மேம்பாட்டு அதிகாரி ஏ.எல்.முகமது இர்பான் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது, செவிப்புலன் வலுவற்ற 100 பேருக்கு புதிய ஆடைகள் வழங்கி வைக்கப்பட்ட அதேவேளை அன்றையதினம் அவர்களின் குடும்பங்களுக்கு மதிய உணவும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :