கட்டாரில் தொழில் புரியும் அட்டாளைச்சேனை உறவுகளின் ஒன்று கூடலும் கிரிக்கெட் போட்டியும்.



தோஹா கட்டாரில் தொழில் புரியும் அட்டாளைசேனையைச் சேர்ந்த உறவுகளை ஒன்று சேர்க்க வேண்டும் தாய் மண்ணில் தம் பிரதேசத்தினுள் வறுமை நிலையில் வாழும் மக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நன்னோக்கில் இவ்வாரம் தோஹா மிசையீட் என்னுமிடத்தில் பாரிய ஒன்று கூடல் ஒன்று மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த ஏற்பாட்டை ஒரு இளைஞனாக இளம் தொழிலதிபராக கட்டாரில் வலம்வரும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஜெளபர் தாஹீர் (அஸ்கி) என்பவர் துணிச்சலுடன் தனியொருவராக முன்னின்று ஏற்பாடு செய்திருந்தார்.

இவ்வொன்று கூடலுடன் அட்டாளைச்சேனை பிரிமியர் லீக் 2022 கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் காலை ஆறு மணி தொடக்கம் இரவு 10 மணி வரை இடம்பெற்றது. குறித்த போட்டி அணிக்கு 08 பேருடன் 05 ஓவர் மட்டுப்படுத்தப்பட்டு வயது வித்தியாசமின்றி 14 அணிகள் களமிறங்கி மிக அட்டகாசமாக விளையாடினர்.

போட்டிகளின் முடிவில் மூன்றாமிடத்தை அட்டாளைச்சேனை றஹ்மானியாபாத் அணியும், இரண்டாம் இடத்தை அட்டாளைச்சேனை சேனையூர் அணியும், முதலாம் இடத்தை அட்டாளைச்சேனை ஓபிஏ அணியும் பெற்றுக்கொண்டனர். வெற்றிபெற்ற அணிகளுக்கு பெருமதிப்பிலான கேடயங்கள் வழங்கப்பட்டதுடன் சிறந்த வீரர்களுக்கும் திறமைக்கான சின்னங்களும் வழங்கப்பட்டன.

அத்துடன் ஒன்று கூடலில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சுமார் 400 பேருக்கு மேல் கலந்து கொண்டமை பெரும் வெற்றியாக அமைந்தது.

அத்துடன் ஒன்று கூடலின் முடிவில் ஊர் நிலமைகளை அவ்வப்போது அறிந்து உதவிகள் புரியவும் ஆலைசனைகள் வழங்கவும் முகநூல் பக்கம் (ADSQ) வட்சப் ((ADSQ) ஆகியவை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வுக்கு கட்டாரில் இருக்கும் ஊரின் பலதரப்பட்ட தொழில்சார் உறவுகளும் கலந்து கொண்டு முழுநாளும் சந்தோசமாக இருந்து உறவுகளைச்சந்தித்து கூடிக்கலைந்து சென்றமை ஒற்றுமையை பறைசாற்றும் விடயமாகவே பேசப்பட்டதுடன் நிகழ்வை முன்னின்று நடாத்திய ஜெளபர் தாஹீர் (அஸ்கி) அவர்களையும் பாராட்டினர்.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :