சாய்ந்தமருதை சேர்ந்த அறிவிப்பாளரும் நாடக நடிகருமான இப்றாஹிம் ஜாபிர், அரச சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அட்டாளைசேனை மத்திய கல்லூரி மண்டபத்தில், அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டி.எம்.றின்சான் தலைமையில் இடம்பெற்ற விருது விழாவின்போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக், கலாசார உத்தியோகத்தர் ஏ.எச்.சபீக்கா ஆகியோரின் முன்னிலையில் மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸ்வரன் அவர்களிடமிருந்து இவர் இவ்விருதினை பெற்றுக் கொண்டார்.
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் உயர்பீட உறுப்பினரான இப்றாஹிம் ஜாபிர், கலை, இலக்கிய மற்றும் சமூக சேவைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment