"முன்மாதிரி ஆலிம்" விருது பெற்றனர் குவைத் வாழ் தமிழ் ஆலிம்கள்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் மகத்தான இஸ்லாமியப் பணிகளை மக்களுக்கு மாண்புடன் எடுத்துரைத்து மாசில்லா சேவையாற்றி வரும் ஆலிம்களின் பணிகளை பாராட்டி "முன்மாதிரி ஆலிம்" விருதுகள் வழங்கப்பட்டன.

குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) கடந்த 18 ஆண்டுகளாக உலகெங்கும் குறிப்பாக குவைத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. இதற்காக அரசுகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் மூலமாகவும் பல்வேறு விருதுகளையும், சான்றிதழ்களையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்த சங்கத்தின் சேவைகளுக்கு அனைத்து மக்களும் மிகப்பெரும் அளவில் பேருதவி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பது ஆலிம் பெருமக்கள்தான்.

குவைத்தில் கே-டிக் சார்பாக தமிழ் ஜும்ஆ பேருரை துவக்கப்பட்டு 500 வாரங்கள் நிறைவு பெற்றதையடுத்து அதனுடன் தொடர்புடைய சங்கத்தின் தலைவர் விசுவகுடி மவ்லவீ M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ, பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., DCA., துணைத் தலைவர்கள் அதிராம்பட்டிணம் மவ்லவீ ஹாஃபிழ் M. முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ, முஹம்மது பந்தர் மவ்லவீ M. ஜைனுல் ஆபிதீன் பாகவீ, கூத்தாநல்லூர் மவ்லவீ S.A.K. முஹம்மது இப்ராஹீம் நூரானீ காஷிஃபீ மற்றும் விஜயபுரம் மவ்லவீ ஹாஃபிழ் A.R. முஹம்மது இப்ராஹீம் மன்பயீ, ஜமாஅ(த்)துல் உலமா குழு செயலாளர் கூத்தாநல்லூர் மவ்லவீ S. ஹாஜா முஹ்யத்தீன் உலவீ, துணைச் செயலாளர் விருத்தாச்சலம் ஹாஃபிழ் S. சைய்யத் முஸ்தஃபா, திக்ர் மஜ்லிஸ் குழு செயலாளர் கல்பாடி மவ்லவீ M. முஹம்மது ஜலீல் ரப்பானீ ஃபாஜில் மன்பயீ, அல் ஃபத்ஹ் மதரஸா ஆசிரியர் பெரியூர்பட்டி மவ்லவீ ஹாஃபிழ் ஜ. ஜியாவுத்தீன் ஃபாஜில் பாகவீ மற்றும் மிர்காப் / குவைத் சிட்டி கிளை துணைச் செயலாளர் புத்தாநத்தம் ஹாஃபிழ் M. முனாஃப் அப்துல் பாஸித் ஆகிய 11 ஆலிம்களுக்கு, அவர்களை கவுரப்படுத்தும் வகையில் "முன்மாதிரி ஆலிம்" விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த 18ம் ஆண்டு ஐம்பெரும் விழாவின் சிறப்பு விருந்தினர்களான மவ்லவீ ஹாஃபிழ் அல்ஹாஜ் எஸ்.எஸ் ஹைதர் அலி மிஸ்பாஹி (முதல்வர், உஸ்மானிய்யா அரபிக் கல்லூரி & தலைவர், மஜ்லிஸுல் உலமா சபை, மேலப்பாளையம், திருநெல்வேலி) மற்றும் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் முனைவர் மு. சதீதுத்தீன் ஃபாஜில் பாகவீ M.A., M.Phil., Ph.D., (தலைமை இமாம், குராஸானி பீர் பள்ளிவாசல் & முதல்வர், ஜாமிஆ அல்ஹுதா அரபிக் கல்லூரி, அடையார், சென்னை மற்றும் உறுப்பினர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, தமிழ்நாடு அரசு) ஆகியோர் இந்த விருதுகளை ஆலிம் பெருமக்களுக்கு வழங்கினர்.

நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :