கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தில் ஒரு மில்லியன் பெறுமதியான வேலைத்திட்டங்கள் கையளிப்புநூருல் ஹுதா உமர், எம்.என்.எம் அப்ராஸ்-
ல்முனை கல்வி வலயத்தின் கல்முனை கமு/கமு/ அஸ்-ஸுஹரா வித்தியாலய பழைய மாணவ மாணவிகள் மற்றும் நலன் விரும்பிகளினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட "உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலைதிட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக இதுவரை நிறைவு செய்யப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்கள் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு (30.10.2022) ஞாயிற்றுக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது

கமு/ கமு/ அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா அவர்களிடம் குறித்த நிறைவு செய்யப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்கள் பழைய மாணவ மாணவிகள் மற்றும் நலன் விரும்பிகளினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

நிகழ்வின் விசேட அம்சமாக உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலைதிட்டத்தில் குறித்த பாடசாலைக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் காத்திரமாக செயலாற்றிமைக்காக பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம். அஜ்வத் மற்றும் சமுக சேவகர் எம்.எம்.நிப்றாஸ் மன்சூர் ஆகியோரின் சமூக சேவையை பாராட்டும் முகமான கல்முனை அஸ்/ஸுஹறா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதியா முன்னிலையில் பாடசாலை சமூகத்தால் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந் நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர்கள், நலன் விரும்பிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :