தேசிய எறிபந்து (Throwball ) போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரி பிரகாசிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக இவ்வருடம் கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியில் எறிபந்து (Throwball) விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டு பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட போட்டியிலும், பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட போட்டியிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் 2022யில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்டத்தில் முதன் முதலாக பங்குபற்றிய இக் கல்லூரியின் 17, 20 வயது பிரிவு அணிகள் 4ம் இடத்தை பெற்றுக்கொண்டது.

இம்மாதம் 8ம் 9ம் திகதிகளில் இலங்கை பாடசாலைகள் எறிபந்து சங்கத்தினால் எஹலியகொடயில் நடாத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான எறிபந்து போட்டியில் 15, 20 வயது பிரிவுகளில் கலந்த கொண்டனர். விளையாட்டு அறிமுகப்படுத்தி பங்கு பற்றிய முதல் வருடத்திலேயே கல்லூரி அணி, முதல் இரண்டு சுற்றுக்களில் வெற்றி பெற்று, காலிறுதி (Quarter Final) வரை முன்னேறியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :