இந்திய தூதர் கோபால் பாக்லே மட்டு.இ.கி.மிஷனுக்கு திடீர் விஜயம்!வி.ரி.சகாதேவராஜா-
ந்திய தூதுவர் கோபால் பாக்லே நேற்று (1) சனிக்கிழமை பகல், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்லத்துக்கு திடீர் விஜயம் செய்தார்.
இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் ஆகியோருடன் இல்ல மாணவர்கள் இந்திய தூதுவரை வரவேற்றார்கள் .

அவர் நேரடியாக இல்லத்தில் உள்ள ராமகிருஷ்ணர் ஆலயத்துக்கு சென்று நவராத்திரி விசேட பூஜையில் கலந்து கொண்டார்.

அவர் இல்ல மாணவர்கள் முன்னிலையில் துர்க்கா தேவிக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினார்.

ஒரு மணி நேரம் அங்கு அவர் அனைத்தையும் சுற்றி பார்த்து பின்பு சுவாமிகளுடன் கலந்துரையாடினார்.

அவர் நவராத்திரி விரதத்தை கடைப்பிடிப்பதனால் ஏதும் அருந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பணிகளை அவர் கேட்டறிந்து புகழாரம் சூட்டினார். பாராட்டி நன்றியும் தெரிவித்து விடைபெற்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :