ஓட்டமாவடி அல் இர்ஷாத் கல்வி நிலைய மாணவர்கள் கௌரவிப்பு

எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டமாவடி அல் இர்ஷாத் கல்வி நிலைய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (15) சனிக்கிழமை இடம்பெற்றது.

கல்வி நிலைய தலைவர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம்.இப்றாஹீம் மதனி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அல் குர்ஆனை மனனம் செய்த மூன்று மாணவர்களும், பரீட்சைகளின் போது சிறந்த புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களும் நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், நாவலடி அந்நூர் அகடமி விரிவுரையாளர் எம்.ஜே.எம்.றிஸ்வான் மதனி, ஹயா நிறுவன பணிப்பாளர் ஏ.எல்.நஜிமுதீன், கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி, கல்குடா ஜம்இய்யது உலமா தலைவர் எம்.எம்.தாஹிர் ஹாமி, ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக், ஹிஜ்ரா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சாபிர், சாஹிரா வித்தியாலய அதிபர் எம்.ஏ.அபூதாஹிர் மற்றும் பாடசாலைகளின் ஆசிரியர்கள், மௌலவிமார்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :