ஹற்றனில் இருந்து பயணிக்கும் இ.போ.சபை பஸ் சேவையை கல்முனை வரை நீடிக்குமாறு பயணிகள் கேட்டுள்ளனர்.



அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கை போக்குவரத்து சபையினால் சேவையில் ஈடுபடுத்தப்படும் ஹற்றன் நகருக்கான சேவையில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு பயணிகள் கேட்டுள்ளனர்.
தினசரி மாலை 4 மணிக்கு கல்முனையில் இருந்து புறப்படும் இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் மாலை 5.30 மணிக்கு மட்டக்களப்பிலிலிருந்து பயணத்தை ஆரம்பித்து செங்கலடி , மகாஓயா, பதியத்தலாவ , பிபிலை , லுணுகல , பசறை , பதுளை , வெலிமடை, நுவரெலியா , தலவாக்கலை ஊடாக ஹற்றன் நகரத்தை நள்ளிரவு 1 மணிக்கு சென்றடைகிறது.
அதே போன்று மீண்டும் தினசரி மாலை 6.30 மணிக்கு ஹற்றனில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பஸ் மட்டக்களப்பு நகரத்தை நள்ளிரவு 2 மணிக்கு வந்தடைகிறது.

ஆனால் பஸ்ஸில் ஹற்றன் , கல்முனை என பெயர்ப்பலகை போடப்பட்டிருந்த போதிலும் மட்டக்களப்பு வரையுமே பஸ் பயணிப்பதால் கல்முனை செல்லும் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் நள்ளிரவில் பயணிக்க முடியாது நிர்க்கதியான நிலைக்கு உள்ளாகி வருகின்றனர்.

போகும் போது கல்முனையில் இருந்து பயணிக்கும் மேற்படி பஸ் வரும் போது மட்டக்களப்பு வரையும் மட்டுப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கல்முனை நகருக்கு இந்த பஸ்ஸை சேவையில் ஈடுபடுத்துமாறு பஸ் பயணிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுள்ளனர்.
ஹற்றன் மற்றும் மட்டக்களப்பு இ.போ.சபை பஸ் சாலைகள் இந்த போக்குவரத்து சேவையினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :