சர்வதேச ஆசிரியர் தின விழா அன்று சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்ற ஆசிரியர் ஒருவரின் பிரிவுபசார விழாவும் நடைபெற்றது.
கல்முனை வலயத்துக்கு உட்பட்ட அட்டப்பளம் விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியராக பணிபுரிகின்ற கிருஸ்ணபிள்ளை விவேகானந்தம் நேற்றைய தினம் ஓய்வு பெற்றார் .
ஆசிரியர் தின நிகழ்வும் பிரிவுசார விழாவும் அதிபர் சதாசிவம் ரகுநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது .
பிரதி அதிபர் த.நடேச லிங்கம் நெறியாழ்கையில் இந்த இரண்டு நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.
காரைதீவைச் சேர்ந்த ஆசிரியர் கிருஷ்ணபிள்ளை விவேகானந்தம் நேற்றுடன் அறுபதாவது வயதில் அவர் ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது அவரை சக ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டியதோடு சகல ஆசிரியர்களுக்கும் மாலை சூட்டி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.
0 comments :
Post a Comment