ஊடகவியலாளர் சியாத்.எம். இஸ்மாயிலுக்கு கௌரவம்நூருல் ஹுதா உமர்-
ம்பாரை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தினால் கடந்த 2005 ஆண்டு தொடக்கம் 2011 ஆண்டு காலப்பகுதிகளில் திட்ட உத்தியோகத்தராகச் சேவையாற்றிய அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளரும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான சியாத்.எம். இஸ்மாயில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரினால் ஞாபகச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் தவிசாளர் வி.பரமசிங்கம் தலைமையில் அட்டாளைச்சேனை தனியார் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போதே இக் கெளரவம் வழங்கி வைக்கப்பட்டது.

இன் நிகழ்வில், அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீஸன், சம்மாந்துறை மற்றும் ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர்களான எஸ்.எல்.எம். ஹனிபா, வி.பபாகரன் மற்றும் அம்பாரை மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்கள், நிறுவன பிரதிநிதிகள், புத்திஜிவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :