கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலைக்கு ஸஹிரியன் பழைய நண்பர்கள் அமைப்பினால் காலணிகள் வழங்கிவைப்புஎம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு ஸஹிரியன் பழைய நண்பர்கள் அமைப்பினால் (ZOFA )காலணிகள் வழங்கிவைக்கப்பட்டது.

ஸஹிரியன் பழைய நண்பர்கள் (ZOFA)அமைப்பினால் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கல்முனை ஸாஹிறா கல்லூரியில் நடாத்தப்படும் ஸஹிரியன் பிரிமியர் லீக்கின் - ZPL கிரிக்கட் தொடரின் இரண்டாம் சுற்று தொடருக்கான “செருப்புகளற்ற ஸாஹிறா” (SlipperFreeZahira ) என்ற தொனிப்பொருளின் ஆரம்ப நிகழ்வு கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இதற்கமைய முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்களுக்கான பாடசாலை காலணிகள் கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபிர் அவர்களிடம் அவ்வமைப்பின் பணிப்பாளர்களால் கையளித்து வைக்கப்பட்டது.

இதேவேளை ஸஹிரியன் பிரிமியர் லீக்கின் - ZPL கிரிக்கட் தொடர் போட்டிகள் (season-02) எதிர்வரும் ஒக்டோபர்( 21-24)வரை கல்முனை ஸாஹிறா கல்லூரி மைதானத்தில் இடம்பெற ஏற்ப்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :