மட்டக்களப்பு கல்லடி ராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் நான்கு வருட கால ஜீவ சேவையை முடித்துக் கொண்டு எதிர்வரும் 16 ஆம் தேதி இந்தியா திரும்புகின்றார்.
அவரது அர்ப்பணிப்பான சேவையை பாராட்டி வழியனுப்பும் பிரியாவிடை வைபவம் எதிர்வரும் 15 ஆம் திகதி கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்லத்தில் நடைபெற இருக்கின்றது.
இ.கி.மிஷன் ஆர்வலர்கள் சிவானந்தா பழைய மாணவர்கள் இல்ல பழைய மாணவர்கள் இணைந்து அந்த நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்கள்..
இதேவேளை, கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல புதிய முகாமையாளராக இதுவரை உதவிப் பொது முகாமையாளராக சேவையாற்றிய ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் நியமிக்கப்பட்டிருக்கின்றார் .
அவரிடம் எதிர்வரும் 14 ஆம் தேதி சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் இல்ல பொறுப்புகளை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட இருக்கின்றார்..
அதேவேளை ,இந்தியாவில் இருந்து மட்டக்களப்புக்கு வரும் சுவாமி சுரர்ச்சிதானந்தஜி அவர்கள் கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல உதவி முகாமையாளராக பணிபுரிய இருக்கின்றார்.
0 comments :
Post a Comment