கிழக்கு மாகாண கல்வி திணைக்கனத்தினால் 2022 யிற்கான பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட விளையாட்டு போட்டி நடைபெற்று வருகின்றது. இதில் ஒரு அங்கமாக சதுரங்க (Chess) போட்டி கல்முனை சாஹிறா கல்லூரி காரியப்பர் மண்டபத்தில் செப்டம்பர் 4ம், 5ம் திகதிகளில் நடைபெற்று முடிந்தது.
இதில் 20வயதிற்குட்பட் ஆண்களுக்கான பிரிவில் கல்முனை ஸாஹிறா கல்லூரி 1ம் இடத்தைப்பெற்று சம்பியனாகவும், 17வயதிற்குட்பட்ட பிரிவில் இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டதோடு தேசியமட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளனர்.
மேலும் தனிதிறமைக்கான (Board Champion) தெரிவில் 20வயதிற்குட்பட்ட பிரிவில் ஏ.எச்.எம்.ஏ.சிமாம், எம்.எச்.எம். நுஸ்ரத் மற்றும் எம்.ஏ.ஏ.அத்தீப் ஆகிய மாணவர்களும், 17வயதிற்குட்பட்ட பிரிவில் எம்.ஏ.தமீம், எம்.இசட்.எம்..சனீப் ஆகிய மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், மாணவர்ளுக்கு பயிற்சியளித்த பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.சாகிர், மாணவர்களை வழிப்படுத்திய சதுரங்க பொறுப்பாசிரியர் எம்.வை.எம்.ரகீப், கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர், ஆகியோருக்கு பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment