வறுமையை காரணமாக வைத்து மாணவர்கள் கல்வியை கைவிடக் கூடாது கல்வியே எமது மூலதனமாகும்-அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ்எம்.என்.எம்.அப்ராஸ்,எம்.ஐ.சம்சுதீன்-
மாணவர்கள் கல்வியின் மூலம் சரியான இலக்கை அடைய வறுமை நிலை காரணமாக அமையக் கூடாது என்ற காரணத்தினால் சமுர்த்தி திணைக்களமானது புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்துள்ளது என அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் தெரிவித்தார்

சமுர்த்திஅபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சமுர்த்தி சமூகப்பாதுகாப்பு நிதியத்தின் மூலம் உயர்தர மாணவர்களுக்கான (2021-2023) சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும்,சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு பெற்று பல்கலைக்கழகத்திற்க்கு தகுதி பெற்ற மாணவர்கள் கெளரவிப்பும்,கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர். எம்.சாலிஹ் தலைமையில் நேற்று பிற்பகல் (07.09.2022)கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் மேலும் இங்கு உரையாற்றுகையில்

சமுர்த்தி திட்டத்தின் நோக்கம் வறுமையை ஒழிப்பதாகும் அவ்வாறு இருக்கும் போது நீங்கள் சிந்திக்கலாம் வறுமையை ஒழிப்பதற்க்கு ஏன் புலமை பரிசில் வழங்க வேண்டுமென்று புலமைபரிசில் வழங்குவதன் மூலம் மாணவர்களின் கல்வியை விருத்தி செய்ய முடியும இதன் மூலம் குடும்பம் தலை நிமிர்ந்து வாழ முடியும்.

ஆரம்பத்தில் நானும் கல்முனை பிரதேச செயலாளரும் சமுர்த்தி குடும்பத்திலிருந்து இந்த உயர் பதவிகளுக்கு வந்தவர்கள் தான்,அதே போன்று ஏழைக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் தான் பிற்காலத்தில் உலகில் தலை சிறந்த விஞ்ஞானியாகவும் இந்தியாவின் ஜனாதிபதியானார் ,கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறை வேற்று பணிப்பாளர் சுந்தர் பிச்சை சாதரண குடும்ப தொழிலாளியின் மகனாவார் இப்படி இவர்கள் கல்வின் முலம் தலை நிமிர்ந்து வாழ முடியுமானால் உங்களுக்குக்கும் அது ஏன் முடியாத விடயமா ?

கல்வியை என் நிலையிலும் மாணவர்கள் விட்டு விடக் கூடாது கல்வி என்பது எமது மூலதனம் இங்கு உள்ள மாணவர்கள் அனைவரும் நாளை சமூகத்தில் உயர் நிலையை அடைய வேண்டும் நாம் இருக்கும் கதிரையில் எதிர்காலத்தில் மாணவராகிய நீங்கள் முன்னனால் அமர்ந்து அலங்கரிக்க வேண்டும்.

சிங்கப்பூர் நாடு தலை சிறந்த நடாக மாறுவதற்கு பிரதான காரணம் கல்வியாகும்.ஒரு காலத்தில் உலக பொருளாதாரத்தை தீர்மானிக்கும் விடயமாக பணம்,வளங்கள் கச்சா எண்ணெய் போன்ற சில பொருட்கள் காணப்பட்டது ஆனால் இனி வரும் காலங்களில் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் விடயமாக கல்வியறிவு மாறவுள்ள நிலை காணப்படுகின்றது பொதுவாக எல்லா வளர்ச்சியடைந்த நாடுகளும் முக்கியத்துவமளிக் கும் மூலதனமாக கல்வியறிவு காணப்படுகின்றது

இதே போன்று எமது வறுமையான குடும்பத்தில் மூலதனமாக கல்வியறிவு இருக்க வேண்டும் நாமும் சமுகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்ப கல்வியறிவு மிகவும் அவசியமாகும்

கல்வியின் மூலமே குடும்பம் தலை நிமிர்ந்து வாழ வைக்கும் உலக நாட்டுடன் எமது நாட்டை உலகின் தலை சிறந்த நாடாக மாற்ற வேண்டியது மாணவர்களின் கடமையாகும் மேலும் மாணவர்கள் மொழி அறிவினை விருத்தி செய்வது அவசியமானதாகும் அதே போல் எமது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும் இதன் மூலம் நாம் முன்னேற்றமடைந்து கொள்ள முடியும் நாம் உயரத்தில் கல்வி கற்கும் போது கல்வி கற்க்கும் துறையில் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் வறுமையை காரணமாக வைத்து கல்வியை கைவிடக் கூடாது இதற்காய் வெட்கப்படவும் கூடாது வாழ்வில் கஷ்ட்டம் வருவது வழமை தான் ஆனால் அது வாழ்வில் தொடர்ச்சியானதாக இருக்காது என்பதை நினைவூட்டுகிறேன்.

எதிர்காலத்தில் மாணவர்கள் நீங்கள் எல்லோரும் சமூகத்தில் முக்கிய துறைகளில் பங்காற்றும் வழிகாட்டியாக வர வேண்டும் என்றார் .

அத்துடன் குறித்த நிகழ்வின் விசேட அம்சமாக கல்முனை பிரதேச செயலக பிரிவில் சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு பெற்ற மாணவர்கள் இருவர் அண்மையில் வெளியாகிய கல்வி பொது தர உயர் தர பெறுபெற்றின் படி பல்கலைக்கழகத்திற்க்கு தகுதியடைந்த கல்முனை சமுர்த்தி வங்கி வலயத்திலிருந்து மருத்துவபீடத்துக்கு தகுதி பெற்ற மாணவி எஸ்.டி.எப்.சஜியா,மருதமுனை சமுர்த்தி வங்கி வலயத்திலிருந்து பொறியியல் துறை பீடத்துக்கு தெரிவான அல் மனார் மத்திய கல்லூரி (தேசியபாடசாலை) மாணவன் எம்.என்.இன்சாப் ரஜாயி ஆகியோர் இதன் போது இங்கு கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இதன் போது பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தகுதி பெற்ற மாணவி எஸ்.டி.எப்.சஜியா மாணவர்கள் , அதிதிகள் மத்தியில் உரையாற்றுகையில்,மாணவர்களின் கல்விக்கு இவ்வாறான உதவிகள் கிடைப்பது பயன்மிக்கதாய் காணப்பட்டது நான் சாதாரண தரத்தின் பின்னர் உயர்தரம் விஞ்ஞான பிரிவுல் கற்ககையை தொடர்ந்தேன் விஞ்ஞான பிரிவில் கற்கும் போது அதிகம் கற்றல் செயற்ப்பாட்டின் போது அதிகம் பணம் செலவாகும் எனது கற்றல் நடவடிக்கைக்கு புலமை பரிசில் மிகப்பெரிய உதவியாக இருந்தது இதனை சரியாக மாணவர்கள் கல்வி நடவடிக்கைக்கு பயன்படுத்த வேண்டும் உயர் தர பரீட்சை என்பது மிகவும் போட்டி நிறைந்தது சரியான முறையில் திட்டமிட்டு மாணவர்கள் கல்வியை கற்க வேண்டும் இதன் மூலம் எமது இலக்குகளை அடைய முடியும் இவ்வாறான புலமை பரிசில் உதவிகள் மூலம் எனது கல்வி நடவடிக்கைக்கு பயன் மிக்கதாய் காணப்பட்டது.இன்று எனக்கு சிறந்த பேருபெறு கிடைத்துள்ளது இதற்காய் உதவிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார் இவர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இருந்து 216மாணவர்கள் இந்த புலமைப்பரிசில் கொடுப்பனவை பெறுவதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்

இந்த நிகழ்வில் விசேட அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத்அலி,அவர்களும் மற்றும் கல்முனை பிரதேச செயலக கருத்திட்ட முகாமையாளர் மகாசங்க முகாமையாளர் எஸ்.எஸ்.பரீரா,மகாசங்க உதவி முகாமையாளர் எம்.எம்.மன்சூர்,சமுர்த்தி சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏ.கமால்தீன்,கல்முனை சமூர்தி வங்கி முகாமையாளர் மோசஸ் புவிராஜ்,நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கியின் முகாமையாளராக எம். ஏ.எம்.பைசால்,மருதமுனை சமூர்தி வங்கி வலய உதவி முகாமையாளர் பி.எம்.இஸ்ஹாக்,கல்முனை சமுர்த்தி வங்கி வலய உதவி முகாமையாளர் ஐ.எல்.அர்சுத்தின், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நௌசாத், கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கலான எம்.எஸ்.அக்பர் ஹலிம், ஏ.எஸ்.எம்.ஜஹ்பர்,சகல பிரிவுக்கு பொறுப்பான சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதன் போது சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு சௌபாக்கியா வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டு வேலைக்கான காசோலையும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :