ஜெனிவாவோ மேற்குலக நாடுகளோ இலங்கை தமிழர்களுக்கு எந்த ஒரு தீர்வையும் தந்து விடப் போவதில்லை! ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி!



வி.ரி.சகாதேவராஜா-
லங்கைத் தமிழர்களுக்கு ஜெனிவாவோ அல்லது மேற்குலக நாடுகளோ எந்த ஒரு தீர்வையும் தந்து விடப் போவதில்லை.எனவே தமிழ் தேசிய பரப்பில் தேசியம் பேசுகின்ற அத்தனை கட்சிகளும் ஒன்றுபட்டு தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு தேவை என்பதை முதலில் தயாரிக்க வேண்டும் .

இவ்வாறு ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி தெரிவித்தார்.
காரைதீவிலுள்ள அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துரைத்தபோது மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..

இலங்கை தீவில் தமிழ் மக்கள் மீது கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட இன ரீதியான அடக்குமுறையின் விளைவே இன்றைய பொருளாதார நெருக்கடி பிரச்சினையாகும்.

உலகில் கப்பல்கள் போக முடியாதவாறு போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த பொழுது மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய ஏழாவது இடமாக இலங்கை அன்று இனம் காணப்பட்டது .அந்த அளவுக்கு இயற்கை வளங்களும் துறைமுகங்களும் உள்ள ஒரு நாடு.
எனினும் தவறான பொருளாதார கொள்கையால் இன்று அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய துரதிஷ்ட நிலைமையில் இருக்கின்றது.

இலங்கையின் ஒரு வருட வரவு செலவு திட்ட தொகை என்பது எமது புலம்பெயர் தமிழர்களின் ஒரு வருட நிதி திரட்டல் ஆகும். அதாவது அவர்களது சேமிப்பாகும். இன்றைய சமகால எரியும் பொருளாதார நெருக்கடிக்கு எம்மால் தீர்வு காண முடியும். அதற்கு ஊழிக்காலம் கண்ட எமது தமிழ் மக்களுக்கான கௌரவமான தீர்வை பெற்றுத்தர வேண்டும்.

எனவே இலங்கை அரசாங்கம் இனியாவது தமிழ் மக்களுக்கான கௌரவமான தீர்வை முன்வைக்கின்ற போது எமது புலம்பெயர் தமிழ் மக்களின் உதவியைப் பெற்று இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து கடன் சுமையிலிருந்து நீங்குவதற்கு முடியும்.அதற்கு நாம் வழி சமைப்போம்.அரசாங்கம் 51 மில்லியன் யு எஸ் டாலர் கடன் பெற்றிருக்கின்றார்கள்.

மொட்டு கட்சிக்கு பின்னாடி இருக்கும் ரணில் அரசாங்கம் தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.
எனினும் அண்மையில் ஜனாதிபதியை தெரியும் முறைமையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு துரதிஷ்டவசமாக அதனைக் கையாண்ட தவறான விதத்தினால் இன்று தமிழ் மக்கள் நியாயமான உரிய தீர்வை பெற்றுக் கொள்வதில் சிரமம் இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு வெல்லக்கூடிய வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இத்தெரிவு முறைமைஅதனை இல்லாமல் செய்திருக்கின்றது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்காலத்திலே சில திருத்தங்களை மேற்கொண்டு இந்த விடயங்கள் பற்றி தீர்மானிக்க வேண்டும்.

அதேவேளை இலங்கை அரசு தீர்வை நோக்கி பயணத்திலே ரணில் அரசாங்கம் ஏதோ ஒரு தீர்வுக்கு தமிழ் மக்களுக்காக வர வேண்டி இருக்கின்றது. எனவே வருகின்ற சந்தர்ப்பங்களை மிகவும் கவனமாக நிதானமாக நுட்பமாக தமிழர் தரப்பு பயன்படுத்த வேண்டும் . இலங்கையில் அந்த வகையிலே இலங்கை தீவில் சிங்கள மக்களோடு ஏனைய மக்களோடு இணக்கமான ஒரு தற்காலிக தீர்வோடு வாழக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.

ஜெனீவாவில் இந்தியா 13-வது திருத்தத்தை அமுல்படுத்துமாறு கேட்டுள்ளது. தமிழ் மக்களுக்கான அதூ தீர்வாக இருக்கின்றது என இந்தியா கருதுகின்றது. இதனூடாக தென்பிராந்தியத்துக்காக அரசியல் சூழலை தமிழர் சிறப்பு நுட்பமாக கையாள வேண்டும்.

இலங்கையிலே சிறுபான்மை என்று ஒரு இனமில்லை. தமிழினம் ஒரு தேசிய இனம் .அது சிறுபான்மை இனம் அல்ல. சிறுபான்மையினம் என்பதற்கு தத்துவார்த்த தளம் வேறு.
நாங்கள் இன்னமும் ஐக்கிய நாடுகள் சபைகளையோ அல்லது ஏனைய நாட்டையோ நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களது அழுத்தங்கள் தேவை. எந்த ஒரு மேற்குலகு நாடானாலும் அல்லது சர்வதேசமும் தமது புவியியல் சாதக நிலைமையை நலன்களை கடந்து இலங்கையை கையாளவேண்டிய தேவை இல்லை. அவர்களது தேவையை மையமாக வைத்து அவர்கள் இயங்குவார்கள்.

ஒரு இன அழிப்பு இடம்பெற்ற ஒரு தளத்தில் இருந்து நாங்கள் தீர்வை எதிர் கொண்டு இருக்கின்றோம் . எமது தேசிய பாதுகாப்பு எனைய அச்சுறுத்தல்களில் இருந்து நாங்கள் விடுபட வேண்டும்..

கொடிய யுத்தத்தில் இருந்து மீண்டு ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கின்றது.
தமிழினம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பாரிய போராட்டத்தை நடத்தியது.
விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் இணைந்த நாங்கள் இன்று ஜனநாயக வழிமுறையில் ஜனநாயக போராளிகள் என்ற பெயரில் திரும்பி இருக்கின்றோம் .
வடக்கு கிழக்கில் நாங்கள் சிந்திய வியர்வை கொட்டிய இரத்தம் நிச்சயமாக போராளிகளுக்கும் எமது மக்களுக்கும் நல்ல பலனைத் தர வேண்டும் .அதற்காக எமது போராளிகளுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அந்த அங்கீகாரம் பெரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் .
கடந்த காலத்தைப் போல எதிர்காலத்தில் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தேர்தல் களத்தில் இறங்கவுள்ளோம்.

உண்மையில் நாங்கள் தேர்தலை மையமாக வைத்து புறப்பட்டவர்கள் அல்ல. மாறாக எமது போராளிகளின் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து விடுபடுவது என்பதும் நோக்கமாக உள்ளது.

துரதிஷ்டவசமாக ரணில் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்பு எமது போராளிகளையும் போராளிகள் குடும்பத்தையும் தொடர்ச்சியாக ராணுவமும் புலனாய்வு பிரிவினரும் பின்தொடர்ந்து வருகின்றார்கள். அச்சுறுத்தலை விடுத்து வருகின்றனர்.இதனை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த அச்சுறுத்தலை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அம்பாறை மாவட்டத்திலே தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரம் என்பது தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற ஒரு இனப்படுகொலை என்று சொல்லலாம். எனவே தமிழ் தேசியம் பேசும் அனைத்து கட்சிகளும் அம்பாறை மாவட்டத்தில் ஒன்று இணைந்து ஒரு தலைமையின் கீழ்
ஒன்றுபட்டு தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் .அம்பாறை தமிழ் மக்களை நேசிக்கின்ற அனைவரும் இதனை இட்டு சிந்திக்க வேண்டும் .

தேசியம் ஒற்றுமை வெற்றி பேசுகின்ற நாங்கள் அரசியல் தீர்வு பற்றியும் பேச வேண்டும் .தமிழீழ விடுதலை போராட்டம் என்பது வட்டு கோட்டை தீர்மானத்திற்கு அமைய அல்லது அதற்கு பலன் சேர்ப்பதாகவே இருந்து வந்திருக்கின்றது. எனவே இலங்கைத் தீவுக்குள் தமிழர்கள் ஒரு தீர்வை நோக்கி நகர முயற்சிக்க வேண்டும் .அதற்கு அழுத்தங்களை ஜெனிவாப் பேரவை அல்லது ஏனைய நாடுகள் தரலாமே தவிர அவர்கள் எமக்கு அரசியல் தீர்வை நேரடியாக தந்து விடப் போவதில்லை.
30 வருட கால கொடிய யுத்தத்தின் பின் மக்கள் ஓரளவு இயல்பு வேலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையிலே மக்களை ஆற்றுப்படுத்தக்கூடிய இடைக்கால தீர்வை பெறுவதற்காக நாங்கள் முயற்சிக்க வேண்டும். அதன் பின்பு நிரந்தர தீர்வை நோக்கி பயணத்தை மேற்கொள்ள வேண்டும். என்றார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை பொறுப்பாளர் நகுலேஸ் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பிரதேச சபை உறுப்பினர் திருமதி சின்னையா ஜெயராணி ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :