கேணிநகர் மதினாவில் கட்டட திறப்பு நிகழ்வும், பரிசளிப்பு விழாவும்எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் அலுவலகத்திற்குட்பட்ட கேணிநகர் மதீனா வித்தியாலயத்தில் புதிய கட்டட திறப்பு நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் இன்று (21) நடைபெற்றது.

சிறி லங்கா ஐ.எஸ்.ஆர்.சீ. அமைப்பின் நிதி உதவியில் கட்டி முடிக்கப்பட்ட கட்டட திறப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.மீராமுகைதீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா சிறி லங்கா ஐ.எஸ்.ஆர்.சீ. அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட ஆலோசகர் ஏ.எல்.ஜுனைட் நளீமி, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே.தாஜுன்நிஸா, உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.யூ.எம்.இஸ்மாயில், ஏ.எம்.ஜாபிர் கரீம், ஆசிரிய ஆலோசகர்களான ஏ.எல்.ஏ.சலாம், எம்.பி.எம்.சித்தீக் மற்றும் ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் ஏ.சி.எம்.நியாஸ், ஹயா இன்டர்நஷ்னல் பிரைவட் லிமிடட் பணிப்பாளர் ஏ.எல்.நஜிமுதீன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :