கிழக்கு மாகாணத்தில் காணிப் பத்திரங்கள் வழங்கலில் திருக்கோவில் பிரதேச செயலகம் முதலிடம் பெற்றுள்ளது.இதனை பாராட்டு முகமாக கிழக்கு
மாகாண காணி ஆணையாளர் தசநாயக்க நேரில் விஜயம் செய்து பாராட்டினார்.
அச்சமயம், அங்கு திருக்கோவில் பிரதேசத்தில் காணி ஆவணங்கள் பெற்றுக் கொள்ளாத மக்களுக்கான காணி ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விலும் கிழக்கு மாகாண காணி நிருவாக திணைக்களத்தின் மாகாணக் காணி ஆணையாளர் டிஎம்ஆர்சி.தசநாயக பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு 362 பயனாளிகளுக்கு காணி ஆவணங்களை வழங்கி வைத்தார்.
கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் கிழக்கு மாகாண பிரதேச செயலகங்களில் அதி கூடிய காணி ஆவணங்களை தாயாரித்த பிரதேச செயலகமாக, திருக்கோவில் பிரதேச செயலகம் இருந்ததாக கிழக்கு மாகாண காணி ஆணையாளரால் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வு திருக்கோவில் செயலகத்தின் காணிப்பிரிவு உத்தியோத்தர் லோஜினி அம்மணிஏற்பாட்டில் நடைபெற்றது.
மேலும் இவ்வாறான மிகச்சிறந்த அடைவினை பெற்றுக் கொண்டமைக்காக பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் , காணி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட காணிப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு மாகாண காணி நிருவாக திணைக்களத்தினால் மெச்சுரைக்கான பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கான முன்னின்று உழைத்த கிராம சேவை உத்தியோகத்தர்களும் பாராட்டப்பட்டனர்.
இந் நிகழ்வில் கிழக்கு கிழக்கு மாகாண காணி நிருவாக திணைக்களத்தின் உதவிக் காணி ஆணையாளர் க.ரவிராஜன், திருக்கோவில் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் க.சதிசேகரன், காணி நிருவாக திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட தலைமை காணி உத்தியோகத்தர் எம் ஐஎம்.முஸம்மில் நிருவாக உத்தியோத்தர் எம்.மோகனராஜா, கிராம சேவையாளர்களின் நிருவாக உத்தியோகத்தர் .கந்தசாமி,நிருவாகபிரிவில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.சசிந்திரன் காணிபிரிவு உத்தியோகத்தர் கோவிந்தசாமி ஆகியோரும் காணிபிரிவு உத்தியோகத்தர்கள் உட்பட திருக்கோவில் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இவ்வாறன முதல் நிலை அடைவுமட்டத்துக்கு கொண்டு சென்ற அனைத்து தரப்பினர்களுக்கும் பிரதேச செயலாளர் நன்றிகளை தெரிவித்தார்..
0 comments :
Post a Comment