பாண்டிருப்பில் நூறுநாள் உரிமை போராட்டம்.



காரைதீவு சகா-
டக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற நூறு நாட்கள் செயல்முனைவின் ஓரங்கமாக, நேற்று (31) புதன்கிழமை கொட்டும் மழைக்கு மத்தியில் கல்முனை பாண்டிருப்பில் நூறுநாள் உரிமை போராட்டம் நடைபெற்றது.
இதன் கருப்பொருள் "கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்" என்பதாகும்.
அம்பாரை மாவட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலுக்கு பவனியாக வருகை தந்த மக்கள் இவ்வாறான கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

1,)நாங்கள் நாட்டை துண்டாக்கவோ தனியரசு கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை கேட்கிறோம் .
2,வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் .

3, 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகார பரவலாக்கலுக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது .அத்தோடு காலாகாலமாக சிங்கள தலைமைத்துவங்கள் பல்வகையான ஒப்பந்தங்களை தமிழ் தலைமைத்துவங்களோடு செய்து கொண்டாலும் இன்றுவரை அவை எங்களுடைய மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது .

அந்த அடிப்படையில், மக்கள் ஒன்றிணைந்து தங்களுக்கான வாழ்வியல் உரிமையை கேட்கின்ற நிகழ்வாக இந்த நிகழ்வு நூறு நாள் செயல்முனைவின் 32 நாளான நேற்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றது .

சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்புகளை சேர்ந்தவர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்களை சேர்ந்தவர்கள் ,விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள், இளைஞர் விளையாட்டுக் கழகத்தினர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :