வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகளின் எழுத்து, வாசிப்பு திறன்களை மேம்படுத்தும் செயலமர்வொன்று (29) இடம்பெற்றது.
மாணவிகள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து அவர்களை சிறந்த தேடல் கொண்டவர்களாக உருவாக்கும் நோக்கில் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பாடசாலை நூலக பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.சபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தர மாணவிகள் கலந்து கொண்டர்.
இந்நிகழ்வில் அதிதிகளான கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி, வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய அதிபர் என்.சிஹாப்தீன், வாழைச்சேனை வை.அஹமத் வித்தியாலய அதிபர் யூ.எல்.எம்.ஹரீஸ் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment