ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (3) மருதானை வை.எம்.எம். ஏ கூட்ட மண்டபத்தில் 60 க்கும் மேற்பட்ட இளைஞா் யுவதிகள் கலந்து கொண்ட ஊடக பயிற்சிக் கருத்தரங்கு நடைபெற்றது. இவ் ஊடகப் பயிற்சியினை ருபாவாஹினி, தினபதி, லேக்ஹவுஸ் முன்னாள் சிரேஸ்ட செய்தி ஆசிரியராகக் கடமையாற்றிய நௌசாத் மொஹிதீன் செயற்படுத்தினாா்.
இவ் ஊடகப் பயிற்சிக்காக அம்பாறை , புத்தளம் . கண்டி. களுத்துறை கொழும்பு கம்பஹா மாவட்டங்களிலுருந்து 60 இளைஞா் யுவதிகள் இத்துறையைினைக் கற்றுக் கொள்ள ஆர்வம் கொண்ட பலரும் கலந்து கொண்டனா்.
இக் கருத்தரங்கின்போது விரிவுரையாளரினால் சமுக ஊடகத் தளங்கள் என்றால் என்ன,? ஒரு செய்தியை எவ்வாறு எழுதுவது . ஊடகவியலாளா்கள், நிறுவனங்கள். செய்திச் சேவைகள் வெளிநாட்டு செய்திகள், எவ்வாறு செய்திகளை சேகரிப்பது சவால்களை முகங் கொடுப்பது பத்திரிகைத்துறை, இலக்ரோணிக் ஊடகம் போன்ற பல்வேறு பல நவீன ஊடகத் தகவல்களை பயிற்சியாளா்கள் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
கலந்து கொண்டோா்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் ஜே..ஜே.பௌன்டேசன் தலைவா் கலாநிதி ஜ.வை.எம். ஹனீப் ஹாஜி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா். அத்துடன் வை.எம்.எம்.ஏ தலைவா் சஹீட் எம். றிஸ்மி, முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்ஹான் பீபி இப்திக்காா். சிரேஸ்ட ஊடகவியலாளா் நௌசாத் மொஹிதீன் , போரத்தின் ஆலோசகா் என்.எம். அமீன், செயலாளா் சிஹாா் எம். அனீஸ், அமைப்பாளா் முஸ்தபா மௌலவி, குழு உறுப்பிணா்கள். நளீா், சமிஹா,ஜெம்சித் ஆகிய ஊடகவியலாளா்களும் கலந்து கொண்டு சான்றிதழ்களை பயிற்சியாளா்களுக்கு வழங்கி வைத்தனா்
0 comments :
Post a Comment