மாளிகைக்காடு மண்ணின் முத்துக்கள் கெளரவிப்பு விழா


பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பிரதேசத்திலிருந்து இவ்வருடம் பல்கலைக்கழகம் தெரிவான மற்றும் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு கிழக்கு இளைஞர்கள் அமைப்பு மற்றும் ஜே.ஜே பவுண்டேசன் அனுசரணையில் அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் தலைவர் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தானிஷ் ரஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சர்வதேச மாற்றத்திற்கான பங்காளிகள் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட ஆலோசகர் ரிஷாத் ஷரீப்,
முதன்மை அதிதியாக ஓய்வுநிலை அதிபர் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் எம்.பி அப்துல் ஹமீட், கெளரவ அதிதியாக ஓய்வுநிலை அதிபர் சட்டத்தரணி எம்.சி ஆதம்வாபா, விஷேட அதிதியாக காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம் இஸ்மாயில், சிறப்பு அதிதிகளாக சபீனா முஸ்லிம் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம் அஸ்மி, காரைதீவு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.ஐ.எம் பரீட்,
மாளிகைக்காடு கிழக்கு கிராம சேவை அதிகாரி ஏ.எம்.எம் நஜீம் ,கமு-அல்-ஹூசையின் வித்தியாலய ஆசிரியர் ஏ.எம் அஹூவர், கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் பிரதி தலைவர் எஸ்.எம் சம்சித் மற்றும் பிரதேச மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :