தமிழ் மக்களை ஏமாற்றிய வரைவு இது ! ஜெனிவாவில் மட்டுமாநகர மேயர் சரவணபவன் சீற்றம்.வி.ரி.சகாதேவராஜா-
2009 முள்ளிவாய்க்காலில் போர் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் ஐநா மூலம் சர்வதேச ரீதியாக ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பி இருந்தார்கள் .ஆனால் தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற முதல் வரைவிலே தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றம் கிடைத்திருக்கின்றது.

இவ்வாறு ஜெனீவாவில் இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார் .

முதல் வரைவு தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்..

கடந்த காலங்களில் முன்னேற்றகரமாக 31/1 46 /1 என்ற பிரேரணைகள் ஐநாவில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இலங்கை அரசாங்கம் அவை தொடர்பாக கடந்த 12 வருட காலமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக ஐநாவும் போதுமான அழுத்தம் கொடுத்ததா என்பது கூட கேள்வியாக இருக்கின்றது.

இம்முறை 46/1 என்ற பிரேரணை கூட அங்கு குறிப்பிடப்படாதது வேதனை அளிக்கிறது.

தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு தொடர்பான விடயம் குறிப்பிடப்படவில்லை.

மாறாக சிறுபான்மை என்ற புதிய பதம் புதிதாக புகுத்தப்படுகின்றது.
இலங்கையில் மூன்று சிறுபான்மையினங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதி கொடுமை இனப்படுகொலை என்பது எந்த இனத்திற்கும் இடம் பெறவில்லை.

எனவே அது தொடர்பாக ஒரு நீதியான விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எடுபடவில்லை. இருந்த பொழுதிலும் ஊழல் விசாரணை செய்தோரை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனை வழங்குவது வெளிநாடுகளில் அடாத்தாக சொத்து சேர்த்து வைத்திருக்கின்றமை என்பதெல்லாம் நல்ல விடயமாக இருக்கின்றது.

இந்த பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளக்கூடியன. இருந்த பொழுதிலும் வரலாற்றில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றிய பரிந்துரை இங்கே குறிப்பிடப்படாதது ஏமாற்றத்தை அளிக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :