கடந்த 74 வருடங்களாக இலங்கை தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதி தொடர்பாக இந்த புதிய வரைவில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. புதிய வரைபு பலத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.இது கண்துடைப்பே.
என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் ஜெனீவாவில் வைத்து தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்..
கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட 46/1 என்ற பிரேரண தீர்மானமாக நிறைவேற்றப்படும் அது கூட இந்த புதிய வரைவில் உள்வாங்கப்படவில்லை.
தமிழின படுகொலைக்கு நீதி வழங்கும் ஒரு அம்சம் கூட இடம் பெறவில்லை.
ஒட்டுமொத்த தமிழினம் எதிர்பார்த்த வரைபை இம்முறை ஐநா சபை முன் வைக்கவில்லை என்பது கவலை அளிக்கிறது.
சர்வதேச பொறிமுறை மூலம் தமிழருக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்து வந்தது . அது தொடர்பாக இங்கு எதுவுமே குறிப்பிடப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது .
அது மாத்திரம் அல்ல சிறுபான்மை என்ற பதம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் என்று அங்கு குறிப்பிடப்படவில்லை என்பது இன்னும் ஏமாற்றமாக இருக்கின்றது.
ஒட்டுமொத்தமாக இது 75% தமிழ் மக்களுக்கு ஏமாற்றமான ஒரு வரைவாகவே நான் பார்க்கின்றேன்
0 comments :
Post a Comment