வாழைச்சேனை அந்நூர் மாணவன் அப்ஸர் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி வரலாற்றுச் சாதனை



எச்.எம்.எம்.பர்ஸான்-
வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றின்படி வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவன் ஏ.முகம்மத் அப்ஸர் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தெரிவித்தார்.

இவர், 3 ஏ பெறுபேறுகளுடன் மாவட்டத்தில் 48 ஆம் இடத்தைப் பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக மாணவன் அப்ஸர் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

இவர், வாழைச்சேனை - 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த எம்.அலாப்தீன் - எம்.யூ. அவ்வா உம்மா தம்பதிகளின் புதல்வராவார்.

மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ள மாணவன் அப்ஸருக்கு பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :